முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உக்ரைனுக்கு எதிரான ட்ரம்பின் நடவடிக்கை : ரஷ்யர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

உக்ரைனுக்கு (Ukraine) எதிரான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் (Donald Trump) சமீபத்திய நடவடிக்கைகளை மொத்தமாக நம்பிவிட வேண்டாம் என்று ரஷ்யர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய (Russia) ஜனாதிபதி மாளிகையின் செய்தித்தொடர்பாளர் குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாம் எப்போதும் சிறந்ததை எதிர்பார்க்க வேண்டும் ஆனால் மோசமானவற்றுக்கும் தயாராக இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க அதிகாரிகள்

நமது நலன்களைப் பாதுகாக்க எப்போதும் நாம் தயாராக இருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

உக்ரைனுக்கு எதிரான ட்ரம்பின் நடவடிக்கை : ரஷ்யர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Warning To Russians Not To Trust Trump

உக்ரைன் அதிகாரிகளை செவ்வாய்க்கிழமை அமெரிக்க அதிகாரிகள் தரப்பு சவுதி அரேபியாவில் சந்திக்கவிருக்கும் நிலையிலேயே செய்தித்தொடர்பாளர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக, அந்தப் போரை தொடங்கிய ரஷ்யாவிற்கு சலுகைகளை வழங்க உக்ரைன் தயாராக உள்ளதா என்பதைத் தீர்மானிக்கும் ஒரு சந்திப்பாக இது அமையுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைன் போரில் தமது இலக்கை ரஷ்யா அடைந்து வருவதாகவும் அந்த செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப் நிர்வாகம்

ட்ரம்ப் நிர்வாகம் தற்போது உக்ரைனுக்கான ஆயுத உதவிகளை நிறுத்தியிருந்தாலும், அடுத்த பல மாதங்கள் போரிடுவதற்கான ஆயுதங்களை உக்ரைன் சேமித்து வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த முறை ரஷ்யாவும் அமெரிக்காவும் உக்ரைன் போர் தொடர்பில் சவுதி அரேபியாவில் பேச்சுவார்த்தை ஒன்றை முன்னெடுத்தது.

உக்ரைனுக்கு எதிரான ட்ரம்பின் நடவடிக்கை : ரஷ்யர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Warning To Russians Not To Trust Trump

அதில், ரஷ்ய – அமெரிக்க உறவை மேம்படுத்தும் விவாதங்களே அதிக முக்கியத்துவம் பெற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சந்திப்புக்கு பின்னரே, உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அமெரிக்காவுக்கு அழைக்கப்பட்டு, வெள்ளை மாளிகையில், சர்வதேச செய்தி ஊடகங்கள் முன்னிலையில் அவமானப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.