தலைமறைவாகியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை கண்டுபிடிப்பதற்கான இலகுவான வழியொன்றை நாடாளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் குறிப்பிட்டுள்ளார்.
2025ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு, இன்று(11) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தேசபந்து தென்னகோன்
தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எழுத்தாணை மனுவொன்றை சமர்ப்பிக்கும் போது, சமாதான நீதவான் ஒருவர் முன்னிலையில் அது அத்தாட்சிப்படுத்தப்பட வேண்டும்.

அந்த வகையில் தேசபந்து தென்னகோன் சமர்ப்பித்துள்ள ரிட் மனுவையும் அவர் சமாதான நீதவான் ஒருவர் முன்னிலையில் உறுதிப்படுத்தியிருக்க வேண்டும்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களம்
குறித்த சமாதான நீதவான் எந்தப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று அறிந்து கொண்டால், அதனை வைத்தே தேசபந்து தென்னகோன் ஒளிந்திருக்கும் பிரதேசத்தை ஓரளவுக்கு ஊகித்துக் கொள்ளலாம்.

அதற்கான ஆவணங்கள் அனைத்தும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் உள்ளன.
இருந்தும் இந்த விடயம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் ஏன் கவனம் செலுத்தவில்லை என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது என்றும் நிசாம் காரியப்பர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்

