முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்படவுள்ள வெளிநாட்டு குற்றவாளிகள்

பிரித்தானியாவில் (United Kingdom) இருந்து அனைத்து வெளிநாட்டு குற்றவாளிகளையும் நாடுகடத்த அனுமதிக்கும் சட்ட மாற்றங்களை கன்சர்வேடிவ்கள் வலியுறுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரித்தானிய சட்டத்தின்படி 12 மாத சிறைத்தண்டனை அல்லது அதற்கு மேற்பட்ட தண்டனை விதிக்கப்பட்ட வெளிநாட்டு குற்றவாளிகள் நாடு கடத்தப்படலாம்.

இருப்பினும், அனைத்து வெளிநாட்டு குற்றவாளிகளையும் நாடு கடத்த அனுமதிக்கும் வகையில் சட்ட மசோதா கொண்டுவர வேண்டும் என கன்சர்வேடிவ்கள் தெரிவித்துள்ளனர்.

புதிய நடவடிக்கைகள்

இதற்கான திருத்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள தொகுப்பின்படி, பிரித்தானியாவில் இருந்து தனிநபர்களை குற்றவாளிகள் உட்பட அனைவரையும் திரும்ப அழைத்துச் செல்ல மறுக்கும் வெளிநாட்டவர்களுக்கு விசா வழங்குவதை நிறுத்த அமைச்சர்களை அனுமதிக்கும்.

பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்படவுள்ள வெளிநாட்டு குற்றவாளிகள் | Uk To Deport All Foreign Criminals New Plan

இதுகுறித்து பிரித்தானிய உள்துறை செயலாளர் கிறிஸ் பில்ப் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த கடுமையான புதிய நடவடிக்கைகள், வெளிநாட்டு குற்றவாளிகளை பிரித்தனியாவில் இருந்து நாடு கடத்த கன்சர்வேடிவ்கள் என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருப்பதைக் காட்டுகின்றன.

வெளிநாட்டு குடிமகன்

ஒரு வெளிநாட்டு குடிமகன் இங்கே ஒரு குற்றம் செய்தால், நாம் அவர்களை வெளியேற்ற வேண்டும், அது அவ்வளவு எளிது.

பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்படவுள்ள வெளிநாட்டு குற்றவாளிகள் | Uk To Deport All Foreign Criminals New Plan

முடிவற்ற மேல்முறையீடுகளை மற்றும் முன்னறிவிப்புகளை நாம் அனுமதிக்க முடியாது.

பெரும்பாலும் ஆபத்தான குற்றவாளிகளிடம் இருந்து, பிரித்தானிய குடிமக்களைப் பாதுகாக்க அரசாங்கத்திற்கு கடமை உள்ளது.

எங்கே ஒரு நாடு தமது குடிமக்களை (குற்றவாளிகள் உட்பட) திரும்ப ஏற்றுக்கொள்ள மறுக்கிறதோ, அந்த அரசு கண்டிப்பாக புதிய விசாக்களை அந்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வழங்குவதை நிறுத்த வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

சட்ட சவால்கள் 

தற்போதைய சட்டத்தின்படி நாடு கடத்தப்படுவதில் சட்ட சவால்கள் உள்ளன அவை மனித உரிமைகள் சட்டத்தின் கீழ் பெரும்பாலும் தடுக்கப்படலாம்.

ஆனால், தற்போதைய எல்லை மசோதாவில் மற்றொரு திருத்தத்தில், நாடுகடத்தல் அல்லது பிற குடியேற்ற முடிவுகளுக்கு எதிராக மனித உரிமைகள் மேல்முறையீடுகளை கொண்டுவர முற்படும் வெளிநாட்டினரை இந்த நடவடிக்கைகள் தடுக்கும்.

பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்படவுள்ள வெளிநாட்டு குற்றவாளிகள் | Uk To Deport All Foreign Criminals New Plan

அதற்கு பதிலாக, பிரித்தானிய உள்நாட்டு சட்டம் மட்டுமே இதுபோன்ற வழக்குகளில் பொருந்தும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

குடியேற்ற கட்டுப்பாட்டு மையத்தின் காவலர் தேசிய கணினியில் இருந்து பெறப்பட்ட தரவுகளின் பகுப்பாய்வின்படி, பிரித்தானியாவில் மூன்று ஆண்டுகளில் 104,000 வெளிநாட்டினருக்கு தண்டனை விதிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.