முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தனது கணவன் ஹிரனிடம் இருந்து விவாகரத்து பெறவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
முகநூலில் அவர் வெளியிட்டுள்ள பதிவொன்றின் மூலமே இதனை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
நீண்ட யோசனை மற்றும் சிந்தனைக்குப் பிறகு இந்த முடிவை எடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீண்ட சிந்தனை
அத்துடன், கிட்டத்தட்ட 10 வருடங்கள் திருமண வாழக்கையில் இணைந்திருந்ததாகவும் ஹிருணிகா சுட்டிக்காட்டியுள்ளார்.
இது இலகுவாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல எனவும் பல மாதங்கள் இது தொடர்பாக சிந்தித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.