மாளவிகா மோகனன்
தென்னிந்திய சினிமா ரசிகர்கள் கொண்டாடும் பிரபல நடிகைகளில் ஒருவர் மாளவிகா மோகனன்.
இவர் ஒரு போட்டோ இன்ஸ்டாவில் வெளியிட்டாலே ரசிகர்களிடம் செம ரெஸ்பான்ஸ். அதிக லைக்ஸ் குவிவதோடு புகைப்படமும் செம வைரலாகும்.
கடைசியாக யுத்ரா என்ற ஹிந்தி படத்தில் நடித்திருந்தார், இப்படத்தை தொடர்ந்து சர்தார் 2, மலையாளத்தில் மோகன்லால் நடிக்கும் ஹிருதயப்பூர்வம் மற்றும் தெலுங்கில் பிரபாஸ் நடிக்கும் தி ராஜா சாப் படத்தில் நடித்துள்ளார், இந்த படம் வரும் மே 22ம் தேதி வெளியாகவுள்ளது.
நடிகையின் பதில்
அண்மையில் ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு நடிகை மாளவிகா மோகனன் பதில் அளித்துள்ளார்.
ஏமாந்த மீனாவிற்கு அண்ணாமலை கொடுத்த யோசனை… இனி சிக்குவாரா, சிறகடிக்க ஆசை புரொமோ
ஒரு ரசிகர் அவரிடம் பிடித்த தமிழ்படம் என்னவென்று கேள்வி எழுப்பியிருந்தார், அதற்கு மாளவிகா, தனக்கு 96 படம் மிகவும் பிடித்திருந்தது என்றார்.
மற்றொரு ரசிகர் பிடித்த Hobby என்ன என்று கேட்க அதற்கு Wildlife Photography பிடிக்கும் என்றவரிடம் இன்னொரு ரசிகர் பிடித்த கிரிக்கெட் வீரர் யார் என கேட்டுள்ளார். அதற்கு அவர், விராட் கோலி என பதில் அளித்துள்ளார்.