குக் வித் கோமாளி
விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பாப்புலர் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த ஷோவின் மூலமாக பலருக்கு பட வாய்ப்புகள் கிடைத்து மக்கள் மத்தியில் தனி இடத்தை பெற்றுள்ளனர்.
அந்த வகையில், வானொலி நிலையத்தில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக தனது பயணத்தைத் தொடங்கி பின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக வலம் வந்து புகழ் பெற்ற நடிகை கேமி தனது திறமை மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
சரியாக போகவில்லை ஆனால் எந்த வருத்தமும் இல்லை.. மனம் திறந்த ஜீ.வி.பிரகாஷ்
ஹேப்பி நியூஸ்
இந்த நிகழ்ச்சிக்கு பின் ஆபிஸ் என்ற இணையத் தொடரில் நடித்து வருகிறார். இந்நிலையில், தற்போது அவரது வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளார்.
அதாவது, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரமாண்ட நடன நிகழ்ச்சியில் கேமி போட்டியாளராகப் பங்கேற்றுள்ளார். இவருக்கு ஜோடியாக இந்த நிகழ்ச்சியில் அருண் நடனமாடுகிறார்.