2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு
109 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
குறித்த வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு நேற்று (25) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் வரவு செலவுத்திட்டத்துக்கு ஆதரவாக 155 வாக்குகளும், எதிராக 46 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
வரவுசெலவுத்திட்ட உரை
2025 ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு வரவு செலவுத்திட்ட உரை நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் கடந்த 17ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

இதையடுத்து, பெப்ரவரி 18 ஆம் திகதி முதல் நேற்று (25) வரை, ஏழு நாட்கள் ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவுசெலவுத்திட்டம்) மீதான இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நடைபெற்றது.
மூன்றாவது மதிப்பீடு
இதற்கு அமைய குழு நிலை விவாதம் பெப்ரவரி 27ஆம் திகதி முதல் மார்ச் 21ஆம் திகதி வரை 19 நாட்கள் இடம்பெறவுள்ளது.

மேலும், 2025 ஆம் நிதியாண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தின் மூன்றாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு மார்ச் 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பி.ப 6.00 மணிக்கு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
You may like this
https://www.youtube.com/embed/hqzBxs8A4-0

