புதிதாக கொண்டுவரப்படவுள்ள மீன்பிடி சட்டமூலம் குறித்து கடற்றொழிலாளர்களுடன்
கலந்துரையாடவில்லை என வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடகப் பேச்சாளர்
அன்னலிங்கம் அன்னராசா குற்றம் சாட்டியுள்ளார்.
நேற்றையதினம்(12) யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்
சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
இலங்கையின் கடற்தொழில் திணைக்களத்தின் அதிகாரிகளும்,
இலங்கையினுடைய கடற்தொழில் அமைச்சரும் தொழிலாளர்களுக்காக
கொண்டுவரப்பட இருக்கின்ற புதிய சட்ட திருத்தம் தொடர்பாக ஊடக சந்திப்பு ஒன்றினை
கொழும்பிலே நடாத்தினர்.
புதிதாக உருவாக்கப்பட்டு இருக்கின்ற அந்த புதிய சட்ட திருத்தம் தொடர்பாக திணைக்களத்தினுடைய தலைவர்கள் அல்லது சட்ட உருவாக்கிகள்
தெரிவித்த கருத்துக்களும், அந்த செயல்பாடும் வடக்கு கடற்றொழில் சமூகத்தை
பொறுத்த அளவிலே கவலை அளிக்கிறது.
புதிதாக கொண்டு வர இருக்கின்ற சட்டத்தில் என்ன இருக்கிறது என்பது தொடர்பாக
இதுவரைக்கும் வடமாகாணத்தில் இருக்கின்ற எந்த கடற்றொழில் சங்கங்களுக்கும்
தெரியப்படுத்தவில்லை.
மேலும் தெரிவிக்கையில்,