சமந்தா
நடிகை சமந்தா, உழைப்பால் உயர்ந்த ஒரு பிரபலம்.
கடின உழைப்பை போட்டு முன்னேறி வந்தவருக்கு உடல்நிலை இடையில் சரியாக ஒத்துழைப்பு கொடுக்காததால் படங்கள் நடிப்பதில் தடுமாறி வருகிறார்.
கடைசியாக சமந்தா நடிப்பில் சிடாடல் என்ற வெப் தொடர் வெளியாகி இருந்தது, அதற்கு ரசிகர்களிடம் நல்ல ரீச் கிடைத்திருந்தது.
கேமியோ ரோல்
இந்த நிலையில் நடிகை சமந்தா பிரபல நடிகையின் புதிய படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளதாக தகவல் வந்துள்ளது. பிரவீன் கந்த்ரேகுலா இயக்கத்தில் அனுபமா, பரதா என்ற படத்தில் நடித்து வருகிறார்.
எந்த நடிகையும் வைத்திராத விலையுயர்ந்த காரை வாங்கிய பிரபல நடிகை.. எத்தனை கோடி தெரியுமா?
பரதா படத்தில் பரதா அணிவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் பெண்களின் நிலையை கதைக்கருவாகக் கொண்டு கதை நகர்கிறது.
இந்த படத்தில் தான் நடிகை சமந்தா கேமியோ ரோலில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது, எனவே படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
சமந்தா மற்றும் அனுபமா இதற்கு முன் அ ஆ படத்தில் ஒன்றாக இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.