நடிகை ஷாமிலி
தென்றல் சீரியல் மூலம் 20 வயதில் சின்னத்திரை நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷாமிலி.
அதன்பிறகு பைரவி, பாசமலர், ரோஜா, மாப்பிள்ளை, வள்ளி உள்ளிட்ட பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளார். எல்லா தொடர்களை தாண்டி ரோஜா சீரியலில் வில்லியாக நடித்து அசத்தி மக்களின் வரவேற்பை பெற்றார்.
மிகவும் பிரபலம் கொடுத்த இந்த சீரியலில் இருந்து ஷாமிலி பாதியிலேயே விலகினார், காரணம் அவர் கர்ப்பமாக இருந்தார்.
புதிய வீடு
இன்ஸ்டாவில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் நடிகை ஷாமிலி இப்போது ஒரு சூப்பரான தகவலை அறிவித்துள்ளார்.
அதாவது அவர் பெரிய வீடு ஒன்றை கட்டியுள்ளார், வீட்டின் பூஜையின் போது எடுக்கப்பட்ட அழகிய வீடியோவுடன் இந்த சந்தோஷ செய்தியை ஷாமிலி வெளியிட அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.
View this post on Instagram