அமெரிக்காவின் (America) அச்சுறுத்தல்களுக்கு பிரான்ஸ் ஒரு போதும் அடிபணியாது என பிரான்ஸ் (France) வர்த்தக அமைச்சர் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த விடயத்தை பிரான்ஸ் வர்த்தக அமைச்சரான லாரன்ட் செயிண்ட் மார்ட்டின் (Laurent Saint Martin) தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், பிரான்சும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் (European Union) போன்ற அதன் கூட்டாளர்களும், அமெரிக்காவின் வரி விதிப்பு அச்சுறுத்தல்களுக்கு அடிபணியமாட்டோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பதில் நடவடிக்கை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump), தான் துவக்க முடிவு செய்த வர்த்தகப்போரை அதிகரிப்பதற்கான முயற்சிகளைத் துவக்குகிறார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் எங்கள் கூட்டாளர்களுடன் இணைந்து பதில் நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதில் உறுதியாக உள்ளது என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.