முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஐக்கிய தேசிய கட்சியின் அரசியல் கோட்டைக்கு கடும் போட்டி!

ஐக்கிய தேசிய கட்சியின் அரசியல் கோட்டை என அடைமொழியிடப்படும் கொழும்பு மாநகர சபையில் வெற்றியை தனதாக்கிக்கொள்ள கடுமையான போட்டி நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேயர் பதவிக்கு பல முக்கிய அரசியல் கட்சிகள் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்துள்ளதாக அறிய முடிகிறது.

அதன்படி, கொழும்பு மாநகர சபைக்கு பலத்த போட்டி உருவாகியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு மாநகரசபை

பொதுஜன ஐக்கிய முன்னணியின் மேயர் வேட்பாளராக  தீபா எதிரிசிங்கவும்,  பொதுஜன பெரமுன  கட்சியின் மேயர் வேட்பாளராக முன்னாள் அமைச்சர் அருந்திகா பெர்னாண்டோவும், ஐக்கிய மக்கள் சக்தியின் மேயர் வேட்பாளராக முன்னாள் அமைச்சர் எரான் விக்ரமரத்னவும், தேசிய மக்கள் சக்தியின்  மேயர் வேட்பாளராக விரோய் கெலீ பல்தசாரும் பெயரிடப்பட்டுள்ளனர்.

ஐக்கிய தேசிய கட்சியின் அரசியல் கோட்டைக்கு கடும் போட்டி! | Tough Competition For Colombo Municipal Council

2018 உள்ளாட்சிசபைத் தேர்தலில் கொழும்பு மாநகரசபைக்கான தேர்தலில் 46.9 சதவீத வாக்குகளுடன் ஐக்கிய தேசியக் கட்சி 60 

21.8 சதவீத வாக்குகளைப் பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு ஆசனங்களை வென்றது.

இதன்படி தற்போது மேயர் வேட்பாளர் பதவிக்கு ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மேயர் ரோஸி சேனநாயக்கவும், சர்வஜன பலய கட்சியைச் சேர்ந்த அதன் ஊடகச் செயலாளர் ஹசன் அலால்தீனும் போட்டியிடுகின்றனர்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஜனாதிபதி தேர்தலிலும், நாடாளுமன்ற தேர்தலிலும் வெற்றியை தனதாக்கிய பெருமையை கொண்டுள்ளது.

முக்கிய அரசியல் பீடம்

எனினும், அக்கட்சி இலங்கையின் தலைநகரான கொழும்பின் முக்கிய அரசியல் பீடமான கொழும்பு மாநகரசபையை இழந்தால் இது அவர்களுக்கு பெரும் சரிவை தோற்றுவிக்கும்.

எனினும் நடந்து முடிந்த தேர்தல்களில் எதிர்தரப்புக்கள் பலவீனமடைந்திருந்தால் அவர்களுக்கு உள்ளூராட்சி தேர்தல் என்பது முக்கியமாக பார்க்கப்படுகிறது.

ஐக்கிய தேசிய கட்சியின் அரசியல் கோட்டைக்கு கடும் போட்டி! | Tough Competition For Colombo Municipal Council

முன்னதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தனது பதவியில் இருந்து விலகி (கடந்த உள்ளூராட்சி தேர்தல்) சஜித் தரப்பு சார்பில் கொழும்பு மேயர் வேட்பாளராக களமிறங்கியிருந்தார்.

 2018 தேர்தலில் சஜித், ரணில் அணிகள் ஒன்றிணைந்திருந்தவேளையிலேயே ஐக்கிய தேசியக் கட்சி கொழும்பு மாநகரசபையைக் கைப்பற்றியது.

தற்போது இரு அணிகளாக அவர்கள் செயல்படுகிறது.

குறித்த இரு கட்சிகளுக்கும் இடையே தற்போது பேச்சுவார்த்தை இடம்பெற்று வரும் நிலையில், சாதகமான நிலை ஏற்பட்டால்  சஜித், ரணில் தரப்பு கொழும்பு மாநகரசபைக்கு கூட்டாக களமிறங்கக்கூடும்.

2018 ஆம் ஆண்டில் மொட்டு கட்சி உள்ளாட்சி சபைத் தேர்தலில் வெற்றியை பெற்றிருந்தது. எனினம் அக்கட்சியால் கொழும்பு மாநகரசபையில் தோல்வியை அடைந்தது.

இம்முறை தேசிய மக்கள் சக்தி வெற்றிபெற்றால் ஐக்கிய தேசியக் கட்சி சார்பு அணிகளின் அரசியலுக்கு இது பெரும் பின்னடைவாகும்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.