நடிகை சோனா தற்போது தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்கமான FEFSI அலுவலகத்தின் முன்பு தர்ணாவில் ஈடுபட்டு இருக்கிறார்.
தான் ஒரு படம் எடுத்ததாகவும், அதற்காக வைத்திருந்த மேனேஜர் பணத்தை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டார் என பெப்சி அலுவலகத்தில் புகார் அளித்து இருந்தாராம் சோனா.

தர்ணா
அந்த மேனேஜர் பணத்தை ஏமாற்றியது உண்மை தான் என தெரிந்தும் பெப்சியில் யாரும் நடவடிக்கை எடுக்க மறுகிறார்கள். திருடனுக்கு ஆதரவாக இருக்கிறார்கள்.
அவன் பணத்தை ஏமாற்றிவிட்டான், இப்போது பணம் இல்லை என சொல்கிறான். நீங்கள் டெக்னீஷியனுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை ஏற்பாடு செய்து கொடுங்க என பெப்சியில் சொல்கிறார்கள்.
படத்தின் ஹார்டு டிஸ்க்கையும் எடுத்து வைத்துக்கொண்டு தரமாட்டேன் என்கிறார்கள் என சோனா குற்றம் சாட்டி இருக்கிறார்.

