மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தை விமான பழுதுபார்க்கும் மையமாக மாற்றுவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
குறித்த விடயத்தை இன்றைய நாடாளுமன்ற அமர்வில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க (Bimal Rathnayake) குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, மத்தள விமான நிலையத்தை ஒரு பொருத்தமான வெளிநாட்டு கூட்டாளியுடன் இணைந்து லாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றுவது தொடர்பில் அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மொத்த இழப்பு
அத்தோடு, மத்தள விமான நிலையம் ரூ. 36.5 பில்லியன் செலவில் கட்டப்பட்டதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், கடந்த ஐந்து ஆண்டுகளில் மாத்திரம் ரூ. 38.5 பில்லியன் மொத்த இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இவ்வாறானதொரு பின்னணியில், இந்த நிறுவனத்தை லாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்ற விரும்புவதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.