சர்வஜன பலய கட்சி, கொழும்பு மாநகர சபைக்கான முதல்வர் வேட்பாளராக தொழிலதிபர்
ஹசன் அலால்தீனை நியமித்துள்ளது.
சர்வஜன பலய தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜெயவீர கொழும்பில் நடத்திய
இப்தார் நிகழ்வின் போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அலால்தீன், முன்னர் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் கட்சியின் அதிகாரப்பூர்வ
ஊடகச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
முதல்வர் வேட்பாளர்கள்
ஏற்கனவே, ஏனைய கட்சிகளும் கொழும்பு மாநகர சபைக்கான முதல்வர் வேட்பாளர்களை
அறிவித்துள்ளன.