முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபகச மற்றும் ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கங்களை விட ஜனாதிபதி அநுர திசாநாயக்கவின் அரசாங்கத்தின் செலவு நூறு மில்லியன் ரூபாய்கள் அதிகம் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
பெரிய வாகன அணிவகுப்புகள் இருக்காது என்றும், நாடாளுமன்றத்திலிருந்து உணவு எடுத்துக்கொள்ள மாட்டோம் என்றும் அவர்கள் கூறினாலும், சில அரசியல்வாதிகளின் போலியான சிக்கனத்தின் மூலம் முன்பை விட அதிக செலவுகள் செய்யப்படுவதாக அவர் கூறினார்.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறினார்.
தலதா மாளிகை
ஜனாதிபதி சமீபத்தில் கண்டியில் உள்ள தலதா மாளிகைக்கு விஜயம் செய்தபோது, அவருடன் ஒரே ஒரு துணை வாகனம் மட்டுமே சென்றதாக ஊடகங்கள் காட்டின.
ஆனால் அவரது பாதுகாப்பிற்காக சுற்றியுள்ள அனைத்து சாலைகளிலும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகளும் நூற்றுக்கணக்கான பாதுகாப்பு வாகனங்களும் நிறுத்தப்பட்டிருந்ததாகவும் அவர் கூறினார்.