புதிய இணைப்பு
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளால் நேற்று (05) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
களனிப் பகுதியில் காணி ஒன்று தொடர்பாக போலி ஆவணங்களைத் தயாரித்து பணம் மோசடி செய்த குற்றச்சாட்டில் மேர்வின் சில்வா கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (Cid) மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா(meryn silva) கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரது வீட்டில் வைத்து குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவொன்றால் மேர்வின் சில்வா கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கிரிபத்கொட பகுதியில் நடந்த ஒரு சம்பவம் தொடர்பாக குறித்த கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணைகளுக்காக அவர் தற்போது குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.
https://www.youtube.com/embed/nU41uv_1MTc

