எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கொழும்பு மாநகர சபைக்கான மேயர் வேட்பாளரை தேசிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.
அதன்படி, கொழும்பு மாநகர சபைக்கான மேயர் வேட்பாளராக தேசிய மக்கள் சக்தி செயற்குழு உறுப்பினர் வ்ராய் கெல்லி பல்தாசர் (Vraie Cally Balthazar) அறிவிக்கப்பட்டுள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா (Tilvin Silva) ஒரு பொதுக் கூட்டத்தில் பேசும்போது இதனை அறிவித்துள்ளார்.
பெண் வேட்பாளர்கள்
அதன்போது, அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் வேட்புமனுப் பட்டியல்களில் 25% பெண் வேட்பாளர்களை நிறுத்த தேசிய மக்கள் சக்தி திட்டமிட்டுள்ளதாகவும் சில்வா குறிப்பிட்டுள்ளார்.