கூட்டு எதிர்க்கட்சி பேச்சுவார்த்தைகள் போலியானவை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிகளான மைத்ரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஆகியோருடன் கூட்டு எதிர்க்கட்சிக்காக சஜித் கலந்துரையாடுவதாக செய்தித்தாள் ஒன்று தெரிவித்திருந்தது.
குறித்த தகவலை சஜித் பிரேமதாச மறுத்துள்ளார்.
FAKE NEWS! pic.twitter.com/tmGDmGn85H
— Sajith Premadasa (@sajithpremadasa) March 23, 2025
செய்தி போலியானது
தனது அதிகாரப்பூர்வ ‘X’ தளத்தில் செய்தி தொடர்பான புகைப்படத்தை பதிவிட்டு இந்த செய்தி போலியானது என அவர் தெரிவித்துள்ளார்.