கொத்மலை அணைக்கட்டை மேலும் 30 மீட்டர் உயர்த்த முடியும் என முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்தவுக்கு இந்த முன்மொழிவை தெரிவிப்பதாகவும் அறிவித்தார்.
கட்டுமானப் பணி
ஸ்வீடன் அரசாங்கம் கொத்மலை அணையைக் கட்டியபோது, அதன் அடித்தளம் 30 மீட்டர் உயர்த்தக்கூடிய வகையில் கட்டப்பட்டது என்பதை அமைச்சருக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

இந்த அணையை 30 மீட்டர் உயர்த்துவதால் அதன் கொள்ளளவை விட இரண்டு மடங்கு அதிகமாக்க முடியும்.
அணையை உயர்த்துவதற்கு பொருத்தமான பொறியியல் நிபுணத்துவம் மற்றும் வெளிநாட்டு உதவியைப் பெறுவதன் மூலம்,
அந்தப் பகுதியைப் பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாட்டலி சம்பிக்க பரிந்துரைத்துள்ளார்.

