குட் பேட் அக்லி
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக, வசூல் மன்னனாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் இந்த ஆண்டு முதலில் விடாமுயற்சி வெளிவந்த நிலையில், அடுத்ததாக குட் பேட் அக்லி வெளிவரவுள்ளது.
விடாமுயற்சி படத்தை தொடர்ந்து இப்படத்திலும் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். மேலும் சுனில், பிரசன்னா, அர்ஜுன் தாஸ், யோகி பாபு, பிரியா வாரியர், சிம்ரன் என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.
சமந்தாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.. தொடர்ந்து ஒல்லியாக மாறும் அவரது போட்டோஷூட்
வருகிற 10ம் தேதி உலகெங்கும் வெளிவரவிருக்கும் இப்படத்தின் மீது ரசிகர்கள் அளவுகடந்த எதிர்பார்ப்பினை வைத்துள்ளனர்.
ப்ரீ புக்கிங்
இந்த நிலையில், இப்படத்தின் ப்ரீ புக்கிங் களைகட்டி வருகிறது. ஆம், ரிலீஸுக்கு இன்னம் 2 நாட்களில் இருக்கும் நிலையில், இதுவரை ப்ரீ புக்கிங்கில் மட்டுமே ரூ. 18 கோடிக்கும் மேல் வசூலை வாரிக்குவித்துள்ளது குட் பேட் அக்லி.
பொறுத்திருந்து பார்ப்போம் முதல் நாள் வசூல் எவ்வளவு பெரிய சாதனையை பாக்ஸ் ஆபிஸில் படைக்கபோகிறது என்று.