முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இராணுவ கட்டுப்பாட்டிலிலுள்ள தமிழர் பிரதேச காணிகள் : சத்தியலிங்கம் எம்.பியின் அவசர கோரிக்கை

வவுனியாவில் (Vavuniya) இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்க
நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் (P. Sathiyalingam) கோரிக்கை விடுத்துள்ளார்.

ஒத்திவைப்பு பிரேரணையில் நேற்று (11) கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “வவுனியா மாவட்டத்தில் கடந்தகாலங்களில் விமானப்படைக்கு சொந்தமான விமானநிலைய
விஸ்த்தரிப்பிற்காக மூன்று கட்டங்களாக காணிகள் கையகப்படுத்தப்பட்டன.

இராணுவ முகாம்

மூன்றாம்
கட்டமாக 1985ம் ஆண்டு பொதுமக்களின் 231.67 ஏக்கர் காணி சுவீகரிக்கப்பட்டது.

இந்தக்காணிகள் வவுனியா நகரிற்கு அண்மையில் ஏ9 வீதியில் அமைந்துள்ளது.

இராணுவ கட்டுப்பாட்டிலிலுள்ள தமிழர் பிரதேச காணிகள் : சத்தியலிங்கம் எம்.பியின் அவசர கோரிக்கை | Land Under Military Control In Vavuniya

நகரவிஸ்த்தரிப்புக்கு தேவையான முக்கியமான இடத்தில் காணப்படும் இந்த காணியை
உரிமையாளர்களுக்கு மீள ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இதேபோன்று ஈச்சங்குளம் பிரதேசத்தில் அமைந்திருந்த துயிலும் இல்லம்
அமைந்திருந்த காணியில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

விடுவிக்க நடவடிக்கை

இதனை விடுவிக்க
நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அத்துடன் கனகராயன்குளத்தில் அமைந்துள்ள 561வது டிவிசன் இராணுவ முகாமிற்கு மூன்று
ஏக்கர் அரசகாணி ஒதுக்கப்பட்டபோதிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலுள்ள
தனியாருக்கு சொந்தமான ஒன்பது ஏக்கர் காணியும், பொதுமயானத்திற்கு சொந்தமான ஐந்து ஏக்கர்
காணியும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இராணுவ கட்டுப்பாட்டிலிலுள்ள தமிழர் பிரதேச காணிகள் : சத்தியலிங்கம் எம்.பியின் அவசர கோரிக்கை | Land Under Military Control In Vavuniya

எனவே அந்தக் காணிகளையும்
விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றேன்” என தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்த துறைசார் பிரதி அமைச்சர் ஜலிந்த ருவான் கொடித்துவக்கு மக்கள்
பிறந்து வளர்ந்து வாழ்ந்த இடங்களை அவர்களிடமே மீள ஒப்படைக்கவேண்டும் என்பதே
ஜனாதிபதியின் நிலைப்பாடு, காரணம் இது மக்களின் மனதோடு தொடர்புபட்டது என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.