சன் டிவியின் சிங்கப்பெண்ணே சீரியல் தற்போது பரபரப்பான கட்டத்தில் இருக்கிறது. ஆனந்தி கர்பமாக இருக்கும் நிலையில் அதற்கு யார் காரணம் என அவருக்கே தெரியாமல் இருக்கிறார்.
இது மற்றவர்களுக்கு தெரிந்தால் தனக்கும், குடும்பத்திற்கும், காதலர் அன்புவுக்கும் சிக்கல் என நினைத்து ஆனந்தி தன்னையே அழித்துகொள்ள முடிவெடுக்கிறார்.
அன்பு கண் முன்னே கடலில் இறங்கிய ஆனந்தி..
இந்நிலையில் தற்போது அடுத்த வார ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ஆனந்தி அன்புவை கடைசியாக ஒருமுறை சந்தித்துவிட்டு வர செல்கிறார்.
மேலும் தனது பெற்றோர் மற்றும் அன்பு அகியோருடன் தீம் பார்க், பீச் என செல்கின்றனர். அப்போது அன்பு ஒரு பக்கம் இருக்க, ஆனந்தி விபரீத முடிவெடுத்து கடலுக்குள் இறங்குகிறார்.
அவரை அன்பு காப்பாற்றுவாரா இல்லையா என்பதை செவ்வாய்க்கிழமை எபிசோடில் பார்க்கலாம்.