நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலின் போது யாழ் மாவட்டத்திலுள்ள 17 சபைகளையும் கைப்பற்றுவோம் என தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ சுமந்திரன் (M. A. Sumanthiran) பகற்கனவு காண்பதாக தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் க.வி.விக்னேஸ்வரன் (C. V. Vigneswaran) தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் (Jaffna) நேற்று (12) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) தங்களுடைய தனித்துவத்தை முன்வைத்து செல்ல வேண்டும் என்ற நோக்கில் தங்களுடைய சங்கு சின்னத்தையும் முக்கியத்துவப்படுத்தி முன்வைத்தமையால் எங்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியாத படியால் நாங்கள் வெளியேறினோம்.
ஆகவே நாங்கள் தனித்து போட்டியிடுவதாக இப்பொழுது அறிவித்துள்ளோம். தேர்தலின் பின்னர் யார் யாருடன் சேரந்து அந்த நிர்வாகத்தை அமைக்க வேண்டும் என்பது தொடர்பில் ஆராய்ந்து தீர்மானம் எடுக்கப்படும்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் சிங்கள ஆதிகத்திலிருந்து விடுபட்டுத் தமிழ் மக்களுக்கான ஒரு தீர்வினை வழங்க முடியாது
மாறுபட்டதொரு இடதுசாரி கொள்கையைக் கொண்டுள்ள ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு (Anura Kumara Dissanayake) தமிழ் மக்களின் ஆதரவு தொடர்ந்தும் கிடைக்குமென்று எதிர்பார்க்க முடியாது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
https://www.youtube.com/embed/Xi_pvRF-H8s