குட் பேட் அக்லி
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் அஜித். இவர் நடிப்பில் இந்த ஆண்டு விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு திரைப்படம் வெளிவந்தன.
இதில் விடாமுயற்சி எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை என்றாலும், குட் பேட் அக்லி அதற்கும் சேர்த்து உலகளவில் மாஸ் காட்டி வருகிறது.
எதுக்கு இறந்துபோனவங்க பாடனும்.. AI பற்றி காட்டமாக பேசிய ஹாரிஸ் ஜெயராஜ்
அஜித்தின் தீவிர ரசிகரான இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான இப்படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். ரசிகர்களிடையே இப்படம் மாபெரும் அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது.
வசூல்
இந்த நிலையில், உலகம் முழுவதும் இப்படம் 5 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, குட் பேட் அக்லி உலகளவில் 5 நாட்களில் ரூ. 180 கோடி வசூல் செய்துள்ளது.