அஜித் குமார்
சிறுத்தை சிவா இயக்கத்தில் முதன் முதலில் தல அஜித் ஹீரோவாக நடித்து வெளியான திரைப்படம் வீரம்.
இப்படத்தில் அஜித்துடன் இணைந்து தமன்னா, சந்தானம், நாசர், தம்பி ராமையா உள்ளிட்ட பல நட்சத்திரகள் நடித்திருந்தனர்.
2014ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளிவந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு மாபெரும் வெற்றிபெற்றது. இந்த வெற்றிக்கூட்டணியை தொடர்ந்து, மீண்டும் மீண்டும் சிறுத்தை சிவா மற்றும் அஜித் இணைந்து பணிபுரிய துவங்கினர். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது.


டிராகன் பட வெற்றி, பிரதீப் ரங்கநாதனின் LIK திரைப்படத்தின் ஷூட்டிங் நிறைவு.. வைரலாகும் வீடியோ
எப்போது தெரியுமா?
இந்நிலையில், அஜித் குமாரின் பிறந்தநாளான மே 1ம் தேதி இவர் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ‘வீரம்’ படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அஜித் ரசிகர்களுக்கு பெரிய ட்ரீட் காத்துக்கொண்டிருக்கிறது.


