குட் பேட் அக்லி
அஜித்தின் விடாமுயற்சி படத்தை தொடர்ந்து கடந்த ஏப்ரல் 10ம் தேதி வெளியான திரைப்படம் குட் பேட் அக்லி.
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்த இப்படம் ரசிகர்களுக்கு பெரிய கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது.
படத்தில் இடம்பெற்ற பாடல்கள், வசனங்கள், அஜித்தின் கலகலப்பான நடிப்பு என நிறைய சூப்பர் விஷயங்கள் இடம்பெற்றன.
மனோஜ் இறப்பிற்கு பிறகு பாரதிராஜா அதற்கு அடிமையாகிவிட்டார்.. பிரபலம் எமோஷ்னல்
பாக்ஸ் ஆபிஸ்
முதல் நாள் மட்டுமே உலகம் முழுவதும் ரூ. 30 கோடிக்கு மேல் வசூலித்த இப்படம் நாளுக்கு நாள் வசூலிலும் அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் 6 நாள் முடிவில் படம் மொத்தமாக ரூ. 114 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளதாம்.
எல்லா இடத்திலும் படத்திற்கான டிக்கெட் புக்கிங்கும் எந்த ஒரு குறையும் இல்லாமல் நடந்து வருகிறதாம்.