உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக திருகோணமலை (Trincomalee) மாவட்டத்துக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசனால் (K. S. Kugathasan) மாவட்ட
தேர்தல் அலுவலகத்தில் நேற்று (14) மாலை கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
இம்முறை தமிழ் அரசு கட்சியானது திருகோணமலை மாநகர சபை, மூதூர் பிரதேச சபை,
குச்சவெளி பிரதேச சபை, திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை, வெருகல்
பிரதேச சபை, கிண்ணியா பிரதேச மற்றும் தம்பலகாமம் பிரதேச சபை ஆகிய சபைகளில்
போட்டியிடுவதற்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தல்
இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம்
குகதாசன் இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கடுமையாக உழைப்பதன் மூலமாக
போட்டியிட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவோம் என தெரிவித்துள்ளார்.
மேலும், யாழ்ப்பாணத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளுக்கும், இலங்கை தமிழ் அரசுக் கட்சின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran) கட்டுப்பணத்தினை செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.