நடிகை அபிநயா
தமிழில் வெளியான நாடோடிகள் படத்தின் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றவர் நடிகை அபிநயா.
அந்த படத்திற்கு பின் சூர்யாவின் 7ம் அறிவு, தனி ஒருவன், வீரம், மார்க் ஆண்டனி உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார். தமிழில் பிஸியாக நடித்து வந்தவர் மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்து ஏராளமான ரசிகர்களை பெற்றார்.
போட்டோஸ்
இந்த நிலையில் நடிகை அபிநயா தனக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக சூப்பர் செய்தி வெளியிட்டார். பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவருமே அவருக்கு வாழ்த்து கூறியிருந்தனர்.
விரைவில் திருமணம் நடக்கவுள்ள நிலையில் மெஹந்தி நிகழ்ச்சி கோலாகலமாக நடந்துள்ளது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அபிநயா தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.