முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நீதி மறுக்கப்பட்ட நாட்டிலிருந்து சென்று நீதி அமைச்சர் பதவி: ஹரி ஆனந்தசங்கரிக்கு சிறீதரன் எம்.பி வாழ்த்து

கனடா (Canada) வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணத்தில் பிறந்தவரான ஹரி ஆனந்தசங்கரி (Gary Anandasangaree) நீதி அமைச்சராகப் பதவியேற்றுள்ளார்.

கனடாவின் புதிய நீதி அமைச்சராக பதவியேற்றிருக்கும் ஈழத்தமிழர் ஹரி ஆனந்தசங்கரிக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சி. சிறீதரன் (S.Sritharan) எம்.பி தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துத் தெரிவித்து கலந்துரையாடி உள்ளனர்.

குறித்த விடயத்தை சி. சிறீதரன் எம்.பியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கனடா புலம்பெயர்ந்து  

இலங்கையின் மூத்த தமிழ் அரசியல்வாதியான தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்த சங்கரியின் இளைய புதல்வரே ஹரி ஆனந்தசங்கரி ஆவார்.

நீதி மறுக்கப்பட்ட நாட்டிலிருந்து சென்று நீதி அமைச்சர் பதவி: ஹரி ஆனந்தசங்கரிக்கு சிறீதரன் எம்.பி வாழ்த்து | Gary Anandasangaree Canadas Minister Of Justice

இலங்கையில் காணப்பட்ட யுத்த சூழ்நிலையை அடுத்து, தனது 13 ஆவது வயதில் புலம்பெயர்ந்து அவர் கனடா சென்றார்.

கனடாவில் தமிழ் இளைஞர்கள் மத்தியில் ஏற்படும் வன்முறைகளை தீர்த்து வைக்கும் வகையில், கனடாவில் இளைஞர்கள் சேவை நிலையமொன்றை அவர் ஆரம்பித்துள்ளார்.

தமிழ் இளைஞர்களிடம் காணப்படும் முரண்பாடு

கனடாவில் வாழ்கின்ற தமிழ் இளைஞர்களிடம் காணப்படும் முரண்பாடுகளை தீர்ப்பதற்காக முன்னின்று செயற்படுபவராக கரி ஆனந்தசங்கரி அந்த காலங்களில் திகழ்ந்துள்ளார்.

நீதி மறுக்கப்பட்ட நாட்டிலிருந்து சென்று நீதி அமைச்சர் பதவி: ஹரி ஆனந்தசங்கரிக்கு சிறீதரன் எம்.பி வாழ்த்து | Gary Anandasangaree Canadas Minister Of Justice

அத்தோடு, கனடா தமிழ்ச் சங்கத்தின் செயற்பாடுகளிலும் அவர் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது, அத்துடன், கனேடிய தமிழ்க் காங்கிரஸ் அமைப்பின் வளர்ச்சிக்காகவும் அவர் முன்னின்று செயற்பட்டுள்ளார்.

இந்த நிலையில், கனடாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ஒன்டாரியோ மாகாணத்தில் ஸ்காபரோ ரூஜ்பார்க் தொகுதியில் பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் இரண்டாவது முறையாக கரி ஆனந்தசங்கரி லிபரல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்