பிரியங்கா தேஷ்பாண்டே திருமணம்
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவர் விஜய் டிவியின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார்.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் துவங்கி ஸ்டார்ட் ம்யூசிக் வரை விஜய் டிவியில் ஒளிபரப்பான பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இவருடைய கலகலப்பான பேச்சு , நகைச்சுவையாக நிகழ்ச்சியை கொண்டு செல்லும் விதம் ரசிகர்களை கவர்ந்தது.
தொகுப்பாளினி பிரியங்காவிற்கும் அவரது கணவருக்கும் வயது வித்தியாசம் எவ்வளவு தெரியுமா?
இவருக்காகவே நிகழ்ச்சியை பார்ப்பவர்களும் பலர் உள்ளனர். நேற்று பிரியங்காவிற்கு வசி என்பவருடன் திருமணம் நடந்து முடிந்தது.
விஜய் டிவி பிரபலங்கள்
நீண்ட நாட்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், விமர்சையாக திருமணம் நடந்துள்ளது. இவர்களுடைய திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
இந்த நிலையில், பிரியங்காவின் திருமணம் விஜய் டிவியை சேர்ந்த அசார், சுனிதா, அன்ஷிதா, அமீர் பாவ்னி, நிரூப், பிக் பாஸ் மதுமிதா ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
இதோ அந்த புகைப்படங்கள்..