முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மூன்றாம் உலக போர் தொடர்பில் பிரபல ஜோதிடர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

கொரோனா குறித்து துல்லியமாக கணித்த ஜோதிடக்கலைஞர் ஒருவர், மூன்றாம் உலகப்போர் வெடிக்கும் அபாயம் உருவாகி வருவதாக எச்சரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கொரோனா, பிரித்தானிய மகாராணியார் இரண்டாம் எலிசபெத்தின் மரணம் மற்றும் உக்ரைன் ஊடுருவல் போன்ற விடயங்களை துல்லியமாக கணித்ததால் வாழும் நாஸ்ட்ரடாமஸ் என பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஜோதிடக்கலைஞரான ஏதோஸ் (Athos Salome) அழைக்கப்படுகின்றார்.

இந்தநிலையில், மூன்றாம் உலகப்போர் குறித்து விடுத்துள்ள எச்சரிக்கை விடுத்துள்ள அவர், தற்போது மூன்றாம் உலகப்போர் வெடிக்கும் அபாயம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

உலகப்போர் 

வரலாற்றில், சின்ன விடயங்களே உலகப்போர் வெடிக்கக் காரணமாக அமைவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மூன்றாம் உலக போர் தொடர்பில் பிரபல ஜோதிடர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் | Top Astrologer Predicts World War Iii

ஆஸ்திரிய ஹங்கேரிய பேரரசின் வாரிசான ஃபிரான்ஸ் பெர்டினாண்ட் (Archduke Franz Ferdinand) என்பவர் கொல்லப்பட்ட விடயமே முதல் உலகப்போர் துவங்க காரணமாக அமைந்தது.

போலந்து ஊடுருவல் இரண்டாம் உலகப்போர் துவங்க காரணமாக அமைந்தது.

சின்ன மோதல்கள்

தற்போது இதேபோல சின்னச் சின்ன மோதல்கள் ஆங்காங்கு நடந்துகொண்டே இருக்கின்றன.

குறிப்பாக, ஜனவரியில் லாத்வியாவுக்கும் ஸ்வீடனுக்கும் இடையில் கடலுக்கடியில் செல்லும் ஆப்டிக் கேபிள்கள் சேதப்படுத்தப்பட்டதையும், டிசம்பர் மாதம், பின்லாந்து எஸ்தோனியாவுக்கிடையே கடலுக்கடியில் செல்லும் மின்சார மற்றும் தொலைதொடர்பு கேபிள்களை சேதப்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் பின்லாந்து காவல்துறையினர் ரஷ்ய எண்ணெய் டேங்கர் ஒன்றை கைப்பற்றிய விடயத்தையும் ஜோதிடக்கலைஞர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மூன்றாம் உலக போர் தொடர்பில் பிரபல ஜோதிடர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் | Top Astrologer Predicts World War Iii

இந்தநிலையில், பால்டிக் கடலில் கண்ணுக்குத் தெரியாத ஒரு போர் வெடித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடலுக்கடியில் செல்லும் இந்த கேபிள்கள் நாகரீக யுகத்தில் தொலைதொடர்புக்கு அத்தியாவசியமான அடிப்படை விடயங்கள் என்பதை அவர் தெரிவித்துள்ளார்.

உருவாகியுள்ள பதற்றம் 

அவை சேதப்படுத்தப்படும் போது இராணுவம் முதல் பல்வேறு டிஜிட்டல் அமைப்புகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் அதனால் பெரும் பொருளாதார நிலையற்றதன்மையும் உருவாகக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கேபிள்கள் சேதப்படுத்தப்பட்டது சதிச் செயல் என தெரியவந்தால் நேட்டோ எப்படி பதிலடி கொடுக்கும் ? ரஷ்யா மீது நேரடியாக குற்றம் சாட்டினால் ரஷ்யா எப்படி பதிலளிக்கும் என அவர் கேள்வியெழுப்பியிருந்தார்.

மூன்றாம் உலக போர் தொடர்பில் பிரபல ஜோதிடர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் | Top Astrologer Predicts World War Iii

அத்தோடு, தென் சீனக்கடலில் உருவாகியுள்ள பதற்றம் எதிர்காலத்தில் சீன அமெரிக்க மோதலாக வெடித்தால் என்ன ஆகும் என்பது தொடர்பில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இதுபோல் கடலுக்கடியில் செல்லும் கேபிள்களை சேதப்படுத்துதல் தென் சீனக்கடலில் உருவாகிவரும் பதற்றம் போன்ற விடயங்கள் கூட மூன்றாம் உலகப்போருக்கு காரணமாக அமைந்துவிடக்கூடும் என ஜோதிடக்கலைஞர் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.