முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தேர்தல் விதிமீறல்கள்: வவுனியாவில் 4 முறைப்பாடுகள் பதிவு

தேர்தல் செலவுகளை வெளிப்படுத்தும் சட்ட ஏற்பாடுகள் தொடர்பில் வேட்பாளர்களுக்கு
தெளிவுபடுத்தியுள்ளதுடன், தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பில் இதுவரை 4
முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக வவுனியா மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர்
சி.அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இடம்பெற்ற உள்ளுராட்சி மன்றங்களில் போட்டியிடும்
வேட்பாளர்களுடனான கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே
அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

154 வாக்களிப்பு நிலையங்கள்

“தேர்தல் பிரசார அலுவலகங்கள் அமைத்தல் மற்றும் சட்டதிட்டங்கள் உள்ளிட்ட
பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

தேர்தல் விதிமீறல்கள்: வவுனியாவில் 4 முறைப்பாடுகள் பதிவு | 4 Complaints Registered In Vavuniya

விசேடமாக, 154 வாக்களிப்பு நிலையங்களில் வாக்கெடுப்பு நடைபெறுகின்ற போதும்,
இம்முறை உள்ளுராட்சி தேர்தல் சட்டத்திற்கு அமைய வட்டாரங்களில் வாக்குகள்
எண்ணப்பட்டு வெளியிடப்படவுள்ளன.

அதற்கு அமைவாக 5 உள்ளுராட்சி
சபைகளிலும் உள்ள 56 வட்டாரங்களிலும் வாக்குகள் எண்ணப்படும். ஒரு வட்டாரத்தில்
பல வாக்களிப்பு நிலையங்கள் இருந்தாலும் ஒரு நிலையத்திற்கு பெட்டிகள் கொண்டு
வரப்பட்டு தனித்தனியாக எண்ணப்பட்டு பெறுபேறுகள் வெளியாகும்.

இதன்படி தேர்தல் செலவுகளை வெளிப்படுத்தும் சட்ட ஏற்பாடுகள் தொடர்பாக அனைத்து
வேட்பாளர்களுக்கும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

தேர்தல் முடிந்த பின் தேர்தல்
செலவுகளை சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு சமர்பிக்காவிடின் அவர்களுக்கு எதிராக
சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிவரும்.

அது பெரியளவில் பாதிப்பு ஏற்படுத்தக்
கூடாது என்பதற்காக தேர்தல் செலவினங்கள் மற்றும் அதனை எவ்வாறு சமர்ப்பிப்பது
தொடர்பில் வேட்பாளர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

வெளிப்படைத் தன்மை

அத்தோடு, நீதியானதும், நியாயமானதுமான ஒரு தேர்தலை எதிர்பார்க்கின்றோம்.

ஒரு வாக்காளர்
யாருக்கு வாக்களிக்கின்றார் என்பதை தவிர, அனைத்து விடயங்களும் மிகவும்
வெளிப்படைத் தன்மையுடன் முன்னெடுக்கப்படுகின்றது.

தேர்தல் விதிமீறல்கள்: வவுனியாவில் 4 முறைப்பாடுகள் பதிவு | 4 Complaints Registered In Vavuniya

மேலும், முறைப்பாட்டு பிரிவு
தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அதற்கான தொலைபேசி இலக்கங்கள்
வழங்கப்பட்டுள்ளன.

இதுவரை 4 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. நான்கும் சிறிய
முறைப்பாடுகள். தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பானது.

தேர்தல் வன்முறை தொடர்பில்
எவையும் பதிவாகவில்லை. அதில் 3 முறைப்பாடுகள் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு
முடிவுறுத்தப்பட்டுள்னன. ஒரு முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று
வருகின்றது” என்றார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.