முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இந்திய உளவுத்துறை மற்றும் உள்துறை அதிகாரிகளிற்கு இலங்கையில் ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாளை 6 ஆம் திகதி இலங்கைக்கான விஜயத்தில் ஈடுபடவுள்ள நிலையில், மோடிக்கான பாதுகாப்பு தொடர்பில் இலங்கை அரசு மிக கரிசனையுடன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.

அதேநேரம் இங்குள்ள இலங்கை தூதரகங்கள் கூட கடந்த காலத்தில் நிகழ்ந்த கசப்பான அனுபவத்தின் அடிப்படையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொணடிருப்பதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விஜயத்தின்போது சுகாதாரம், வலுச்சக்தி, டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் இரு நாட்டிற்கும் இடையில் கைசாத்திடப்படும் என்று நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்திருந்தார்.

எனினும், இவ்வாறு ஒப்பந்தங்கள் கைசாத்திடப்பட்டாலும் வடக்கு கிழக்கிற்கான விஜயங்கள் குறித்து அரச தரப்பில் இருந்து எந்தவித தகவல்களும் வெளியிடப்படவில்லை.

இந்தியாவைப் பொறுத்த வரையில் கடந்த கால அனுபவத்தின் அடிப்படையில் இலங்கை மீது ஒரு அச்ச நிலை தொடர்ச்சியாக இருப்பதாக கூறப்படுகின்றது.

அதாவது 1987ஆம் ஆண்டு ராஜீவ்காந்தி இலங்கைக்கு வந்தபோது இடம்பெற்ற இராணுவ அணிவகுப்பு மரியாதையில் தாக்கப்பட்டமையே அந்த அனுபவமாகும்.

இது இந்தியாவின் நடுவண் அரசை தொடர்ச்சியாக அச்சத்திற்கு உள்ளாக்கியதுடன், விஜயமுனி என்கின்ற கடற்படை அதிகாரியே ராஜீவ்காந்தியை தாக்கினார். அதன்பின் அவர் சிறையில் அடைக்கப்பட்டு பிரேமதாச ஆட்சிக்காலத்தில் விடுதலை செய்யப்பட்டார்.

பின்னர் 2020ஆம் ஆண்டில் மகிந்த ராஜபக்ச மற்றும் சரத் வீரசேகர ஆகியோருக்கு ஆதரவாக பிரசாரங்களை மேற்கொண்டார்.

மேலும் அதே காலப்பகுதியில் மோடியைப் பற்றியும் கருத்துக்களை வெளியிட்டார்.

குறிப்பாக, தாக்குதல் இடம்பெற்ற காலப்பகுதியில் சிறையில் இருந்தபோது இந்திய புலனாய்வாளர்கள் வந்து விசாரணை நடாத்தினார்கள் ஆனால் பதில் எதுவும் கூறவில்லை என விஜயமுனி குறிப்பிட்டுள்ளார்.

இது ஒருபுறம் இருக்க இந்த தாக்குதலின் பின்னணியில் அன்றைய மக்கள் விடுதலை முன்னணிக்கு தொடர்பு இருப்பதாக அதிகம் பேசப்பட்டது.

எனினும், மக்கள் விடுதலை முன்னணியினர் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை முழுமையாக எதிர்த்தவர்கள்.

இந்நிலையில், நாளைய தினம் மோடியினுடைய வருகையானது பெரும்பான்மை பலத்தை பெற்ற அரசாங்கத்தை பகைக்க கூடாது என்ற காரணத்தினால் வடக்கு – கிழக்கு விஜயத்தை தவிர்த்திருக்கலாம் என பரவலாக அறியப்படுகிறது.

இது தொடர்பில் ஆராய்கிறது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி…                      

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.