நடிகை த்ரிஷா
தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய சினிமாவையே கலக்கிக்கொண்டிருந்த முன்னணி நடிகை த்ரிஷா. சமீபத்தில் இவர் அஜித்துடன் இணைந்து நடித்த குட் பேட் அக்லி திரைப்படம் வெளிவந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
அடுத்ததாக தக் லைஃப் திரைப்படம் ஜூன் 5ம் தேதி வெளிவரவுள்ளது. இப்படத்தில் கமல் ஹாசன் மற்றும் சிம்புவுடன் இணைந்து நடித்துள்ளார். இப்படத்தின் முதல் பாடல் நேற்று வெளிவந்த நிலையில், ப்ரீஸ் மீட் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர்.
நடிகை திவ்யபாரதி கிளாமர் புகைப்படங்கள்
திருமணம் குறித்து பேசிய த்ரிஷா
இதன்பின், கமல், சிம்பு மற்றும் த்ரிஷா மூவருடனும் கலந்துரையாடல் நடைபெற்றது. அப்போது திருமணம் எப்போ என த்ரிஷாவிடம் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த நடிகை த்ரிஷா “திருமணத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. நடந்தாலும் ஓகே, நடக்கவில்லை என்றாலும் ஓகே” என கூறினார். இதற்கு கமல் ஹாசன் தக் ரீபிலே ஒன்று கொடுத்தார். அந்த வீடியோ தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
Anchor: What are your thoughts on Marriage? #TrishaKrishnan : I don’t believe in marriage. நடந்தாலும் ஓகே தான் நடக்கலனாலும் ஓகே தான் #KamalHaasan Epic reply 😂
pic.twitter.com/ohxj2mfPCG— Nammavar (@nammavar11) April 18, 2025