அமெரிக்காவினால் கதவுகள் அடைக்கப்படும்போது, ஐரோப்பிய ஒன்றியத்தின் தகவுகள்
திறக்கப்படும் என்று எவராவது எண்ணினால் அது முற்றிலும் தவறாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய
நாடாளுமன்றத்தால் கொண்டு வரப்படவுள்ள புதிய சட்டத்துடன் புதிய ஜி.எஸ்.பி.
பிளஸ் வரவுள்ளது என்றும், அதற்கமைய தற்போது ஜி.எஸ்.பி. பிளஸ் கிடைக்கப் பெறும் சுமார்
6 நாடுகள் அதனை இழக்க நேரிடும் எனவும் கூறியுள்ளார்.
இதனைத் தெரிவித்த அவர் மேலும்
குறிப்பிடுகையில்,
நரேந்திர மோடி
“இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விஜயம் மற்றும் இந்தியாவுடன் செய்து
கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் தொடர்பில் அடுத்த நாடாளுமன்ற அமர்வுகளில்
கேள்வியெழுப்ப எதிர்பார்க்கின்றோம்.
கைசாத்திடப்பட்டப்பந்தங்கள் தொடர்பில் தெரிந்துகொள்வதற்கான உரிமை சகலருக்கும்
உள்ளது.

இந்தியப் பரவாலக்கத்தைக் கடுமையாக எதிர்த்த குழுவொன்று இன்று இந்தியப்
பிரதமருக்கு பிரம்மாண்ட வரவேற்பளித்து அவருக்கு இலங்கையில் வழங்கப்படும்
அதியுயர் கௌரவ நாமத்தையும் வழங்கியிருக்கின்றமை உண்மையில்
மகிழ்ச்சியளிக்கின்றது.
இலங்கைக்கு மிக அருகிலுள்ள பாரிய பொருளாதார சக்தி
இந்தியாவாகும்.
தென்னிந்தியாவின் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் ஆந்ரா ஆகிய
மாநிலங்கள் அடுத்த தசாப்தத்தில் உலகில் மிக வேகமாக அபிவிருத்தியடையும் வலயமாக
அமையும்.
துரித அபிவிருத்தி
இவற்றின் இந்தத் துரித அபிவிருத்தியில் பயன்பெறுவதற்கு எமக்கு சிறந்த
வாய்ப்பிருக்கின்றது. எவ்வாறிருப்பினும் அதற்கான முன்னெடுப்புக்களுக்கு தமது
சிந்தனையை மாற்றிக்கொள்ள வேண்டும்.

இந்த அரசு ஆட்சியமைத்ததில் இருந்து சுவர்களை உடைத்து, பாலங்களை அமைக்குமாறு
நான் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றேன்.
அவ்வாறு சுவர்களை உடைத்து,
பாலங்களை அமைத்தவர்களுக்கு அமெரிக்காவால் தடை விதிக்கப்படவில்லை. மாறாக
பாலங்களை உடைத்து சுவர்களை அமைத்தவர்களுக்குத் தடையிருக்கின்றது. இதன் மூலம்
நாம் பாடத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும்” என்றார்.

