ஜனநாயகன்
நடிகர் விஜய்யின் கடைசி படமாக ஜனநாயகன் படம் தயாராகி வருகிறது. எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் தனது திரைப்பயணத்தில் நடிக்கும் கடைசி படமான ஜனநாயகன் அடுத்த வருடத்தில் வெளியாக உள்ளது.
இப்படத்திற்கான படப்பிடிப்பு சென்னையில் செம வேகமாக நடந்து வருகிறது, விஜய்யின் ஷுட்டிங்கின் போது வெளியே வந்து தனது ரசிகர்களையும் சந்தித்து வருகிறார்.
தற்போது ஜனநாயகன் பட நடிகர் ஒருவர் வாங்கிய புதிய கார் பற்றிய தகவல் தான் வந்துள்ளது.
யார் அவர்
பாலிவுட்டில் சமீபத்தில் வெளியான அனிமல் படத்தின் மூலம் தென்னிந்திய சினிமா ரசிகர்களுக்கும் நன்கு பரீட்சயமானவர் பாபி தியோல்.
தமிழில் கடைசியாக இவர் சூர்யாவின் கங்குவா படத்தில் நடித்திருந்தார், ஆனால் படம் சரியாக போகவில்லை. தற்போது விஜய்யின் ஜனநாயகன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் புத்தம் புதிய ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் காரை இவர் வாங்கியுள்ளார்.
நடிகர் பாபி தியோல் வாங்கி இருப்பது ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் காரின் எஸ்வி எடிசன் 2 (SV Edition 2) என்கிற விலையுயர்ந்த வேரியண்ட்டை ஆகும்.
இவர் வாங்கியுள்ள எஸ்வி எடிசன் 2 வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் ரூ.2.95 கோடி என கூறப்படுகிறது.