முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உள்ளூராட்சி சபைகளில் தனித்து ஆட்சி : சுமந்திரன் அதிரடி

உள்ளூராட்சி சபைகளில் தனித்து ஆட்சி அமைக்க முயற்சிக்கிறோம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran) தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சிக்கான வேட்பு மனுக்கள், எம்.ஏ சுமந்திரன் தலைமையில் நேற்று (19) கிழக்கு மாகாணத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தமிழரசுக் கட்சி 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இவ்வளவு காலமும் தாங்கள் மட்டுமே புனிதமானவர்கள் என்று தேர்தலில் போட்டி
போட்டுக் கொண்டிருந்தவர்கள் தங்கள் நிலைமையை உணர்ந்து ஒரு சிலரோடு சேர்ந்து
தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

உள்ளூராட்சி சபைகளில் தனித்து ஆட்சி : சுமந்திரன் அதிரடி | Sumanthiran Opinion On Local Government Elections

இப்படியாகத்தான் நாடாளுமன்ற தேர்தலுக்கும் ஒன்பது கட்சி கூட்டு, பத்து கட்சிக்
கூட்டென பல செய்திகள் கூட்டுகள் வந்தன.

தப்பி தவறி ஒருவர் மட்டும் நாடாளுமன்ற
உறுப்பினராக வந்தார், எந்தவித தாக்கத்தையும் இந்த கூட்டு செலுத்தாது.

சபைகளுக்கான வேட்புமனு

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் ஐந்து உள்ளூராட்சி சபைகளுக்கான
வேட்புமனுக்களை தாக்கல் செய்திருக்கிறோம்.

மிகுதி 12 சபைகளுக்கான
வேட்புமனுக்களை நாளை காலை சமர்ப்பிப்போம்.

உள்ளூராட்சி சபைகளில் தனித்து ஆட்சி : சுமந்திரன் அதிரடி | Sumanthiran Opinion On Local Government Elections

நிறைந்த போட்டியின் மத்தியிலே வேட்பாளர்களை தெரிவு செய்ய வேண்டியதாக
இருக்கிறது.

அதனால் சற்று நேரம் தாமதித்து தான் இறுதி செய்து கொண்டிருக்கிறோம்.

உள்ளூராட்சி சபை

கட்சியினுடைய தீர்மானத்தின் படி எந்த ஒரு சபைக்கும் முதல்வரோ தவிசாளரோ அறிவிக்கப்படப் போவதில்லை அத்தோடு, தேர்தலுக்கு பிறகு தான் அது சம்பந்தமாக கட்சி முடிவு எடுக்கும்.   

உள்ளூராட்சி சபைகளில் தனித்து ஆட்சி அமைக்க முயற்சிக்கிறோம் ஆனால்
எல்லாருக்கும் தெரிந்த விடயம்.

உள்ளூராட்சி சபைகளில் தனித்து ஆட்சி : சுமந்திரன் அதிரடி | Sumanthiran Opinion On Local Government Elections

இந்த தேர்தல் முறைமையிலே எந்த கட்சியாக
இருந்தாலும் தனித்து ஆட்சியமைப்பது கடினமான விடயம் ஆனாலும் நாங்கள் முயற்சி
செய்கிறோம்.

அப்படியாக அல்லது பெரும்பான்மை கிடைக்காத இடங்களில் அந்தந்த
சபைகளையும் சபைகளில் வேறு யாருக்கு பிரதிநிதித்துவம் கிடைத்திருக்கிறது என்பதை
பொறுத்து நாங்கள் தீர்மானிப்போம்” என அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்