காஜல் பசுபதி
சன் மியூசிக் தொலைக்காட்சியில் பாடல் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலமானவர்களில் ஒருவர் தான் நடிகை காஜல் பசுபதி.
அதில் இருந்து அப்படியே சின்னத்திரை பக்கம் வந்தவர் கஸ்தூரி, அரசி, இனியா போன்ற சீரியல்களில் நடித்தார். அதன்பின் வசூல் ராஜா எம்பிபிஎஸ், டிஸ்யூம், பெருமாள், சிங்கம், கோ போன்ற படத்திலும் நடித்தார்.
தக் லைப் பட நிகழ்ச்சியில் ஆங்கிலத்தில் பேசச் சொன்ன தொகுப்பாளர்.. நேரடியாக மறுத்த நடிகை அபிராமி
தற்போது வாய்ப்புகள் அதிகம் வராததால் காஜல் பசுபதி ஒரு குறும்படத்தை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறாராம்.
அந்த படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட உள்ளதாக கூறியுள்ளார்.
நடிகையின் பேட்டி
காஜல் பசுபதி ஒரு பேட்டியில், பல சீரியல்கள் மற்றும் படங்களில் நான் நடித்ததற்கு எனக்கு சம்பளமே வரவில்லை.
அண்மையில் ஒரு சீரியலில் நடித்து இருந்தேன், அதற்கு சம்பளம் தராததால் நான் கேட்டேன்.
ஆனால் அவர்கள் படப்பிடிப்பில் நான் குடித்துவிட்டு தகராறு செய்தேன் என்று பொய்யாக குற்றச்சாட்டை கூறி என்னுடைய கேரியரை வீணாக்கிவிட்டார்கள்.
இரண்டு மாசம் நாய் மாதிரி வேலை வாங்கிவிட்டு, சம்பளத்தை தராமல் தகராறு செய்ததாக சொல்லுகிறார்கள், தகராறு செய்ததற்கான ஆதாரம் இருக்கா என்று கேட்டால் இல்லை என நொந்துபோய் பேசியுள்ளார்.