இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில், சிங்கள – தமிழ் புத்தாண்டு காலத்தில் தனக்கு அழைப்பாணை திகதி வழங்கப்பட்டுள்ளது என்றும், இந்தக் காலகட்டத்தில் அவரும் அவரது வழக்கறிஞர்களும் கொழும்பில் இருக்க மாட்டார்கள் என்பதால் வேறு திகதியைக் கோர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் – சிங்கள புத்தாண்டு
ரணில் விக்ரமசிங்கவிடம் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்ள அழைப்பு விடுத்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு எதிரான ஊழல் மோசடி வழக்கு தொடர்பில் வாக்குமூலம் வழங்கவே அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில், குறித்த அழைப்பாணை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி திகதி மாற்றம் கோரி இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.


