தொடர் சிகிச்சைகளுக்கு பின்னர் உடல்நிலை தேறியநிலையில் பொதுவெளியில் முதல்முறையாக பாப்பரசர் பிரான்சிஸ்(pope-francis) மக்களை சந்தித்தார்.
நிமோனியாவால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த பாப்பரசர் பிரான்சிஸ்(88) கடந்த மார்ச் 23-ஆம் திகதி மருத்துவமனையிலிருந்து வத்திக்கான் திரும்பினார்.
திரண்டிருந்த மக்களை சந்தித்தார்
இந்த நிலையில், புனித பீட்டர் சதுக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை(ஏப். 6) நடைபெற்ற திருப்பலி நிகழ்ச்சியில் திரண்டிருந்த மக்களை அவர் சந்தித்தார்.
சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி வந்திருந்த பாப்பரசர் பிரான்சிஸைப் பார்த்ததும் மக்கள் மகிழ்ச்சியடைந்ததை காண முடிந்தது.
செயற்கையாக ஒக்சிஜன்
அவர் இயல்பாக சுவாசிக்க சிரமப்படுவதால் மூக்கின் வழியாக குழாய் பொருத்தப்பட்டு செயற்கையாக ஒக்சிஜன் அளிக்கப்பட்டு வருகிறது.
எனினும், அவர் சிரமத்தை பொருட்படுத்தாது மெல்லிய குரலில் மக்களிடம் பேசினார்.