சயீப் அலிகான்
பாலிவுட் சினிமாவில் பிரபலங்களில் பலர் நிஜ வாழ்க்கையிலும் இணைந்துள்ளார்.
அப்படி ஒரு ஜோடி தான் கரீனா கபூர் மற்றும் சயீப் அலிகான். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர், மும்பை போட்டோ கிராப்பர்கள் எப்போதும் இவர்களை சுற்றியே வருவார்கள்.
சமீபத்தில் சயீப்அலிகான் வீட்டில் திருடன் புகுந்து நடிகரை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
தற்போது நடிகர் குணமடைந்து பழைய நிலைக்கு திரும்பிவிட்டார்.
புதிய வீடு
மும்பை, லண்டன் என பல இடங்களில் வீடு வைத்துள்ள சயீப்அலிகான் தற்போது இன்னொரு ஊரில் புதிய வீடு ஒன்று வாங்கியுள்ளாராம்.
ஹீரோவாக இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி ஒரு படம் நடித்துள்ளாரா?.. யாருக்கெல்லாம் தெரியும்?
அதாவது அவர் கத்தார் நாட்டில் தான் புதிய வீடு வாங்கியுள்ளாராம். அங்கு மிகவும் பாதுகாப்பாக உணர்ந்தது மட்டுமில்லாமல் வீட்டிலிருந்து விலகி மற்றொரு வீட்டில் இருப்பது போல் உணர்ந்ததாகவும் கூறியுள்ளார்.
சைஃப் அலி கான் சமீபத்தில் வாங்கிய புதிய வீடு கத்தாரின் தோஹாவில் உள்ள செயிண்ட் மார்சா அரேபியா தீவு, தி பேர்ல் இல் அமைந்துள்ளது என கூறப்படுகிறது.