கொங்கோவில் (Democratic Republic of the Congo) பெய்து வரும் கனமழையால் ஏற்பட வெள்ளத்தில் சிக்கி 33 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
மத்திய ஆப்பிரிக்க நாடான கொங்கோ குடியரசின் தலைநகர் கின்ஷாசாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
மீட்பு பணிகள்
இக் கனமழை காரணமாக பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அந்நாட்டில் 13 மாவட்டகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதாகவும், இதனால், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வெள்ளப்பெருக்கினால் இது வரை 33 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கனமழை, வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க தேசிய பேரிடம் மீட்புக்குழுவினர், இராணுவத்தினர் களமிறக்கப்பட்டு மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த பகுதிகளில் கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.