நடிகர் மகேஷ் பாபு தெலுங்கு சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவர். அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது.
மகேஷ் பாபு படங்களில் நடிப்பது மட்டுமின்றி பல டிவி விளம்பரங்களிலும் நடித்து இருக்கிறார். அதன் மூலமாகவும் பல கோடிகள் சம்பாதிக்கிறார்.
சம்மன்
மகேஷ் பாபு விளம்பரங்கள் நடித்ததற்கு 5.9 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கி இருக்கிறார்.
Surana Group நிறுவனத்துடம் இருந்து அவர் வாங்கிய சம்பளம் பற்றி விசாரிக்க தற்போது அமலாக்கத்துறை அவருக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.
அந்த நிறுவனத்தில் சோதனை செய்தபோது 100 கோடிக்கும் மேல் தவறான பணப்பரிமாற்றம் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் தான் அந்த நிறுவன விளம்பரத்தில் நடித்த மகேஷ் பாபுவுக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருக்கிறது.