கனடாவில் ஒன்ராறியோ (Ontario) மாகாணத்தில் வர்த்தக நடவடிக்கைகளை பாதுகாக்கும் வகையில் அரசாங்கம் சில வரிச் சலுகைகளை வழங்குவதாக அறிவித்துள்ளது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, சில மாநில வரிகளை ஆறு மாதங்களுக்கு தள்ளிவைக்கும் தீர்மானத்தை ஒன்ராறியோ அரசு அறிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மேற்கொண்ட நடவடிக்கைகளினால் ஏற்பட்ட நெருக்கடிகளை சமாளிக்கும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாநில நிர்வாக வரி
சில மாநில நிர்வாக வரிகள் — பீர், வைன் மற்றும் மதுபான வரி, பெட்ரோல் வரி ஆகியவை — 2025 ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் அக்டோபர் 1 ஆம் திகதி வரை அறவீடு செய்யப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த தீர்மானம் வர்த்தக நிறுவனங்களுக்கு சுமார் $9 பில்லியன் வரை பணப்புழக்க நிவாரணம் அளிக்கும் எனவும் வர்த்தக நிறுவனங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என ஒன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்ட் (Doug Ford) தெரிவித்துள்ளார்.
மேலும், இது வர்த்தக நிறுவனங்களுக்கு ஆறு மாதங்களுக்கு வட்டியில்லா கடனாக இருக்கும் என நிதி அமைச்சர் பீட்டர் பெத்லென்பால்வி கூறியுள்ளார்.