நடிகை பவித்ரா லட்சுமி விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோ மூலமாக பிரபலம் ஆனவர். அவர் நாய்ஸ் சேகர் உள்ளிட்ட சில படங்களில் ஹீரோயினாகவும் நடித்து இருக்கிறார்.
பவித்ரா லட்சுமி தற்போது உடல் மெலிந்து காணப்படுவது பற்றி இணையத்தில் பல விதமான கமெண்டுகள் வந்துகொண்டிருக்கிறது. அதை பற்றி அவர் விளக்கம் கொடுத்த நிலையிலும் அதை பற்றி பல விதமான தகவல்கள் பரவி வருகிறது.
சிகிச்சையில் இருக்கிறேன்
இந்நிலையில் தற்போது பவித்ரா லட்சுமி இது பற்றி விளக்கம் கொடுத்து இருக்கிறார்.
தான் உடல்நிலை மோசமாகி சிகிச்சை பெற்று வருவதாகவும், தன்னை பற்றி வதந்திகள் பரப்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.