சமந்தா
இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சமந்தா. கடந்த சில ஆண்டுகளாக இவர் நடிப்பில் பெரிதும் படங்கள் எதுவும் வரவில்லை என்றாலும் கூட, ரசிகர்களால் உச்ச நட்சத்திரமாக பார்க்கப்படுகிறார்.
விரைவில் மிகப்பெரிய படங்களுடன் மாஸ் கம் பேக் கொடுக்கப்போகிறார் என தகவல்கள்வெளியாகியுள்ளது. அட்லீ – அல்லு அர்ஜுன் திரைப்படத்தில் கதாநாயகியாக சமந்தா நடிக்கவிருக்கிறார் என கூறுகின்றனர்.
மேலும் ராம் சரண் – சுகுமார் கூட்டணியில் உருவாகவுள்ள திரைப்படத்திலும் சமந்தா நடிக்கப்போவதாக பேச்சு அடிபடுகிறது. ஆனால், இதுகுறித்து இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை.
நடிகையாக வலம் வரும் சமந்தா, சுபம் படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகியுள்ளார். இப்படம் மே மாதம் வெளிவரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வாரம் ஓடிடி-யில் ரிலீஸாகும் எதிர்பார்ப்புக்குரிய இரண்டு படங்கள்.. Week end என்ஜாய் பண்ணுங்க
நடிப்பு குறித்து பேசிய சமந்தா
இந்த நிலையில், நடிகை சமந்தா பேட்டி ஒன்றில் கூறிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் “நான் நடித்த முதல் இரண்டு திரைப்படங்களை இப்போது நான் பார்த்தாலும் எனக்கு வெட்கமாக இருக்கிறது. நான் ஏன் இவ்வளவு மோசமாக நடித்திருக்கிறேன் என யோசிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.