வெற்றி – வைஷ்ணவி
சின்னத்திரையில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் வெற்றி வசந்த். youtube மூலம் பிரபலமாகி, சிறகடிக்க ஆசை சீரியலில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தார். இருவரும் தங்களது காதலை அறிவித்த நிலையில், விமர்சையாக இவர்களது திருமணம் நடைபெற்று முடிந்தது.
வெற்றி – வைஷ்ணவி திருமணத்திற்கு பின் ஒன்றாக இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்களை அடிக்கடி இணையத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
விருதுகளை விட அதுதான் எனக்கு மிகவும் முக்கியம்.. நடிகை சாய் பல்லவி ஓபன் டாக்
வருத்தம்
இந்நிலையில், கடந்த வாரம் வைஷ்ணவிக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டிருக்கிறது. அப்போது வெற்றி வசந்த் மனைவிக்காக கசாயம் போட்டு கொடுத்து அவரை பக்கத்தில் இருந்து கவனித்து கொண்டுள்ளார்.
இதனை வைஷ்ணவி தனது இன்ஸ்டா பக்கத்தில் தன் அம்மா போன்று கணவர் கவனித்து கொள்கிறார் என்று பதிவிட்டிருந்தார். இந்த பதிவுக்கு கீழ் இவர்கள் இருவரை உருவ கேலி செய்து மோசமான கமெண்ட்களை சிலர் பதிவிட்டுள்ளனர்.
தற்போது, இது போன்று கமெண்ட் செய்பவர்கள் குறித்து வைஷ்ணவி தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். அதில், ” ஒருவர் மகிழ்ச்சியாக இருப்பதை கண்டு வாழ்த்த வேண்டும் என்று அவசியம் இல்லை. ஆனால், ஒரு சிலர் மற்றவர்கள் மனம் கஷ்டப்படும் வகையில் பேசி வருகின்றனர்.
பிரபலங்கள் என்றால் என்ன அவர்களுக்கும் சந்தோஷங்கள் துக்கங்கள் இருக்கும் அவர்கள் அதை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்வது தவறான விஷயம் கிடையாது. இது போன்று கமெண்ட் செய்பவர்களை தண்டிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.