நடிகை ரம்பா
சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்த உள்ளத்தை அள்ளித்தா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ரம்பா.
இதன்பின் செங்கோட்டை, அருணாச்சலம், காதலா காதலா, மின்சார கண்ணா, அன்புடன், ஆனந்தம், மிலிட்டரி, 3 ரோஸஸ் என பல திரைப்படங்களில் நடித்து வந்தார். தமிழ் மட்டுமின்றி மற்ற மொழி திரைப்படங்களிலும் பிஸியாக நடித்து வந்தார்.
குட் பேட் அக்லி படம் உலகளவில் இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா, இதோ பாருங்க
ஆனால், திடீரென சினிமாவிலிருந்து விலகினார். இது அவருடைய ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை கொடுத்தது. இந்த நிலையில், சினிமாவிலிருந்து விலகியது ஏன் என்பது குறித்து நடிகை ரம்பா வெளிப்படையாக பேசியுள்ளார்.
வெளிப்படை பேச்சு
“எனக்கு திருமணமாகி குழந்தைகள் பிறந்தவுடன், என் குழந்தைகளுக்கு ஒரு குறிப்பிட்ட வயது வரும் வரை குறைந்தபட்சம் ஒரு பெற்றோராவது அவர்களுடன் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். இதனால் தான் நான் சினிமாவில் இருந்து சில ஆண்டுகள் விலகி குழந்தைகளுடன் இருந்தேன். ஆனால், நடிப்பில் எனக்கு இருந்த ஆர்வம் கொஞ்சம் கூட குறையவில்லை. மேலும், என்னுடைய முதல் காதல் எப்போதுமே சினிமா தான்” என அவர் கூறியுள்ளார்.
நடிகை ரம்பா தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் ஜோடி ஆர் யூ ரெடி நிகழ்ச்சியின் நடுவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.