முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வாய்த்தர்க்கத்தில் முடிந்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் : அர்ச்சுனாவே காரணம் என குற்றச்சாட்டு

மோசமான செயற்பாடுகள் மூலம் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா குழப்பியுள்ளார் என கடற்றொழில் மற்றும் நீரியல் கடல்வளங்கள் அமைச்சரும், ஒருங்கிணைப்புக் குழு குழு கூட்டத்தின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகரன் (Ramalingam Chandrasekar) தெரிவித்துள்ளார்.

யாழ். (Jaffna) மாவட்டஒருங்கிணைப்புக் குழு குழு கூட்டம் இன்று (25.03.2025) காலை 9 மணியளவில் யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையில் இடம்பெற்றது.

ஒருங்கிணைப்புக் குழு குழு கூட்டம் நிறைவடைந்த பின் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் 

மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், “வரவு- செலவுத் திட்ட கூட்டத்தொடர் முடிவடைந்துள்ள நிலையில், யாழ்.மாவட்டத்துக்கு பாதீட்டில் ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடு தொடர்பில்
ஆராய்ந்து முடிவுகளை எடுப்பதற்காகவே இன்றைய ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வாய்த்தர்க்கத்தில் முடிந்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் : அர்ச்சுனாவே காரணம் என குற்றச்சாட்டு | Dcc Meeting Jaffna Ramalingam Chandrasekhar

மாவட்ட அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடப்படவிருந்த இக்கூட்டத்தில் சிவன் பூஜையில் கரடி புகுந்ததுபோல சம்பவங்களும் இடம்பெற்றன.

தொல்லை தாங்க முடியாமல் எம்.பியொருவர் வெளியேறி சென்றுள்ளார். மேலும் சில அதிகாரிகள் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர்.

மோசமாக நடந்துகொண்ட அர்ச்சுனா

எவருடைய பேச்சுக்கும் கட்டுப்படாத நபரொருவரால் தான் இப்படி நடந்தது. நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மோசமாக நடந்துகொண்டார். தனக்குள்ள தனிப்பட்ட பிரச்சினை காரணமாக சம்பந்தமில்லாத விடயங்களைக்கூட அவர் குறிப்பிட்டுள்ளார்.

எத்தடை வரினும் யாழ்.மாவட்டத்துக்குரிய அபிவிருத்தி திட்டங்கள் தொடரும். அவை உரிய வகையில் முன்னெடுக்கப்படும். ஒருங்கிணைப்புக்குழு தலைவருக்குள்ள அதிகாரம் இனி முழுமையாக பயன்படுத்தப்படும்.

சம்பவம் தொடர்பில் ஊடகங்களில் செய்திகள் வரும். நாம் இது பற்றி மக்களிடமே முறையிடுகின்றோம். அவர்கள் பார்த்தக்கொள்வார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery

https://www.youtube.com/embed/s9sBgMXONBE

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.